Tuesday, March 18, 2025

ஜெயிலர் படத்திற்காக 100 கோடியை தாண்டும் ரஜினியின் சம்பளம்..! அப்போ தமன்னாவிற்கு எவ்வளவு தெரியுமா..?

- Advertisement -
- Advertisement -

ஜெயிலர் திரைப்படத்தில் நடிப்பதற்காக ரஜினி – தமன்னாவிற்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்பட்டுள்ளது என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படம் தான் ஜெயிலர். இதனை பிரபல இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார்.மேலும் ஜெயிலர் திரைப்படத்தின் முதல் பாடல் கடந்த சில தினங்களுக்கு வெளியாகி

மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.அந்த வகையில் இந்த படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன், தமன்னா, விஜய் வசந்த், மோகன் லால், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் விதமான சூப்பர் ஸ்டார் இந்த பட வாய்ப்பை நெல்சனுக்கு கொடுத்துள்ளார்.

அத்துடன் ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து விஜய் வசந்த், விநாயகம், விடிவி கணேஷ், தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் வருகின்றனர்.இந்த நிலையில் ஜெயிலர் திரைப்படத்திற்கு பிரபலங்களுக்கு வழங்கப்பட்ட சம்பளம் தொடர்பான தகவல் வெளியாகியிருக்கின்றது.

இதன்படி,1. ரஜினிகாந்த்- 150 கோடி 2. மோகன்லால் – 4-18 கோடி வரை 3. ஜாக்கி ஷ்ராஃப் – 4 கோடி 4.சிவராஜ்குமார் – 2-4 கோடி
5. தமன்னா – 3 கோடி 6. ரம்யா கிருஷ்ணன் – 80 லட்ச ரூபாய்இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன் ரஜினிகாந்திற்கு தான் அளவிற்கு அதிகமாக சம்பளம் கொடுக்கப்படுகின்றது என தெளிவாகின்றது.அத்துடன் சம்பள விவரங்களை பார்த்த இணையவாசிகள்,“ ரஜினிகாந்திற்கு இவ்வளவு சம்பளமா? ..” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular