தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் முன்னணி நாயகியாக வலம் வந்த ஒரு டாப் நடிகை.விஜய், அஜித், விக்ரம், சூர்யா என பல்வேறு முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்கள் நடித்தாலும் அவரது பெயரை நினைத்த உடனே முதலில் நியாபகம் வருவது அவரது நடனம் தான், இடுப்பழகி என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டவர்.

சிறந்த நடிகையாக வலம் வந்த போதே சிம்ரன் 2003ம் ஆண்டு தீபக் என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார். நடிகை சிம்ரனுக்கு 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர்.
இன்ஸ்டாவில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் நடிகை சிம்ரன் தனது கணவர், மகன்களுடன் எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். பல வருடங்களுக்கு முன் குடும்பத்துடன் வெளிநாட்டில் புகைப்படம் எடுத்துள்ளார்.
தற்போது அதே இடத்திற்கு தனது குடும்பத்துடன் சென்று புகைப்படம் எடுத்து இரண்டையும் ஒன்றாக சேர்த்து இன்ஸ்டாவில் பதிவு போட்டுள்ளார்.அதில் அவரது முதல் மகனை பார்த்த ரசிகர்கள் அட சிம்ரனின் மகனா இவர், நாயகன் லுக்கில் உள்ளாரே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.