Saturday, March 15, 2025

75வயது முதியவருடன் நெருக்கமாக முயற்சித்த 32வயது நடிகை..பொலிஸாரிடம் சரணடைந்த வயோதிபர்..!

- Advertisement -
- Advertisement -

75வயது முதியவருடன் நெருக்கமான 32வயது நடிகையின் தொல்லை தாங்க முடியாமல் பொலிஸ் புகார் கொடுத்த முதியவரின் சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழ் சீரியல்கள் போன்று மலையாள சீரியல்களில் நடித்துப் பிரபலமானவர் நடிகை நித்யா சசி.இவர் ஒரு நாள் ஒரு முதியவருடன் போனில் தொடர்பு கொண்டு நட்பாக பேசியுள்ளார். பின்னர் தனது நண்பருடன் முதியவரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது முதியரின் ஆடைகளை களைந்து அவருடன் நெருக்கமாக நின்று ஒரு சில புகைப்படங்களை எடுத்துள்ளார்கள்.இதனை தொடர்ந்து புகைப்படங்களை எடுத்த பின்னர் நடிகையுடன் வந்த பினு என்பவர் திடீரென உள்ளே நுழைந்து அந்த முதியவரை மிரட்டி இருக்கின்றார்.

இந்த நிலையில், முதியவரின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிரப் போவதாக மிரட்டி ரூபாய் 25 இலட்சத்தை கேட்டுள்ளார்கள். அவர் மிரட்டலுக்கு பயந்து 11 இலட்சம் கொடுத்துள்ளார்.

பின்னர் மீண்டும் 25 இலட்சம் கேட்டு குறித்த நடிகை மிரட்டியுள்ளார்.இவர்களின் மிரட்டலுக்கு பயந்த முதியவர் பொலிஸாரிடம் புகார் கொடுத்துள்ளார்.இதனையடுத்து ஆக்ஷன் எடுத்த பொலிஸார் அந்த நடிகையையும், அவரது நண்பரையும் கைது செய்துள்ளனர்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular