இரத்தினபுரி – பாணந்துறை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த பெண் உயிரிழந்துள்ளார்.நிமாலி பண்டார என்ற 30 வயதான பெண் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 29ஆம் திகதி இரவு உயிரிழந்துள்ளார்.

அவர் அதே மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் செவிலியராக பணியாற்றி வந்துள்ளார்.கடமையை முடித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் கணவருடன் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போதே விபத்து நேர்ந்தது. சம்பவ இடத்திலேயே கணவரான 34 வயதான ஆசிரி விஜேசுந்தர உயிரிழந்துள்ளதாகவும் கிரியெல்ல பொலிஸார் தெரிவித்தனர். கணவர் தேசிய தொலைக்காட்சியில் பணிபுரிகிறார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சொகுசு ஜீப் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் விபத்து நேர்ந்துள்ளதுடன் மற்றுமொரு காரிலும் மோதுண்டமையினால் அதில் பயணித்த பெண் ஒருவரும் சிறு குழந்தையும் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.