கத்தரிக்காய் முற்றினால் கடைக்கு வந்து தான் ஆக வேண்டும் என்ற பழமொழி யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ சினிமா நடிகைகளுக்கு அற்புதமாக பொருந்தும். காரணம் சினிமாவில் முன்னணி நடிகையாகும் வாய்ப்பை பெறுபவர்கள்.

ஆரம்பத்தில் குடும்பப்பாங்கனியாகத்தான் நடிப்பேன் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் எனக்கென்று ஒரு கொள்கை இருக்கிறது எனக்கென்று ஒரு சட்டம் இருக்கிறது. எங்கள் குடும்பத்திற்கு என்று ஒரு மரியாதை இருக்கிறது என வானத்துக்கும் பூமிக்குமாக பேசுவார்கள்.
ஆனால் நாட்கள் செல்ல செல்ல பட வாய்ப்புகள் குறைய தொடங்கிய பிறகுதான் அவர்களுடைய உண்மையான ஆட்டமே தெரியவரும். அந்த வகையில், பல நடிகைகள் தங்களுடைய
ஆரம்ப காலத்தில் குடும்பபாங்கனியாக தோன்றிய அடுத்தடுத்த வருடங்களில் கவர்ச்சி குதிரைகளாக சினிமாவில் ஓட்டம் பிடித்து இருக்கிறார்கள்.