Monday, March 10, 2025

4 பேருடன் கெத்து காட்டிய விஜய் 40 பேரிடம் அடிவாங்கினாரா? மீடியாவிற்கு தெரியாத விஜயின் மறுப்பக்கம்!

- Advertisement -
- Advertisement -

4 பேருடன் கெத்து காட்டிய விஜய் 40 பேரிடம் அடிவாங்கியதாக மீடியாவின் பப்ளிக்காக நடிகர் விஜய் ஒப்புக் கொண்டுள்ளார்.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் தான் நடிகர் விஜய். இவர் நடிப்பில் கடைசியாக “வாரிசு” திரைப்படம் வெளியானது.

இதனை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படம் வெளிவரக்கின்றது.திரைப்படம் வெளியாவதற்கு முன்னரே அரசியலில் கால் பதித்து விட்டார்.விஜயின் அடுத்த திரைப்படங்கள் 3 வருடங்களுக்கு பின்னர் தான் வெளியாகும் என ரசிகர்கள் கடும் துக்கத்தில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் விஜய் நீண்ட நாட்களுக்கு முன்னர் கொடுத்த பேட்டி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
அதில்,,“ நான் கல்லூரியில் படிக்கும் போது 10 நண்பர்களுடன் ரயிலில் பயணித்து கொண்டிருந்தேன். அப்போது எங்களுடன் வந்த பெண்களை ரயிலில் உள்ள 4 பேர் கலாய்த்து விட்டார்கள்.

இதனால் கடுப்பான நாங்கள், அவர்களை அடித்து விட்டோம். அடுத்த ரயில் நிலையம் வருவதற்கு முன்னர் அவர்களின் ஆட்கள் 40 பேர் ரயிலில் ஏறி எங்களை சராமாறிய தாக்கி விட்டார்கள்.

அதற்கு பின்னர் தான் எனக்கு புரிந்தது பேசாமல் இருந்துருக்கலாம் என்று, மெட்ராஸ் செல்லும் போது என்னுடைய நண்பர்கள் கட்டுடன் தான் வந்திறங்கினார்கள்.” என ஓபனாக பேசியுள்ளார்.இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த இணையவாசிகள், “ நம்ம விஜய் அண்ணா இப்படி இருந்திருக்காங்க..” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular