விஜய்யின் மாண்புமிகு மாணவன் படத்தில் அறிமுகமாகி சின்னத்திரை நடிகையாக வலம் வருபவர் தான் ஸ்ருதி ராஜ்.அதனை தொடர்ந்து ஆபீஸ், தென்றல் என தொடர்ந்து சீரியல்கள் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

சமீபத்தில் சன் தொலைக்காட்சியில் ஸ்ருதி நடித்துவந்த தாலாட்டு சீரியலில் இசையாக நடித்தார். இந்த சீரியல் முடிந்ததும் தொடர் குழுவுடன் எடுத்த வீடியோவை பதிவிட்டு எமோஷ்னல் பதிவையும் போட்டிருந்தார்.
ஸ்ருதி ராஜுக்கு சைக்கிளிங் செல்லும் பழக்கம் உள்ளதாம், தினமும் காலை நேரம் அல்லது விடுமுறை நாட்களில் சைக்கிளிங் செய்வாராம்.உடல் எடையை குறைக்க அதிக கொழுப்புகள், எண்ணெய் உணவுகளை நிறுத்திக் கொண்டாராம்.
ஸ்ருதி ராஜ் ஆரோக்கிய பிரச்சனையில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க ஸ்ருதி ஆரோக்கியமான உணவுகளை 6 முறை பிரித்து சாப்பிட தொடங்கினாராம். தினமும் காலையில் வாக்கிங் செல்வதை வழக்கமாக வைத்துள்ளாராம்.