Friday, April 18, 2025

முகத்தில் சுருக்கத்துடன் வயதாகிய நிலையில் உலக அழகி: வைரல் புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்

- Advertisement -
- Advertisement -

உலக அழகியாக வலம் வந்த ஐஸ்வர்யா ராயின் க்ளோஸ் அப் புகைப்படத்தைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.உலக அழகியாக வலம் வந்த ஐஸ்வர்யா ராய் அப்போதும் இப்போதும் தமிழ் சினிமாவில் கொண்டாடும் நடிகையாக இருப்பவர். தமிழ் சினிமாவில் மணிரத்தினத்தின் இருவர் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார்.

அதற்கு பிறகு சூப்பர் ஹிட் படங்களை அடுத்தடுத்துக் கொடுத்து முன்னணி நடிகையாக திகழ்ந்தார். அதன் பிறகு பொலிவூட் நடிகர் சல்மான் கானை காதலித்து வந்தார்.ஆனால் அவர்களிடம் கருத்து வேறுபாடு காரணமாக அவரிடம் இருந்து விலகி விட்டார். பின்னர் 2007ஆம் ஆண்டு அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

மேலும், இவர்கள் இருவருக்கும் ஆராத்யா என்ற பெண் குழந்தையும் இருக்கிறார்.தமிழில் ரஜினி நடிப்பில் வெளியான எந்திரன் திரைப்படத்தில் நடித்திருந்தார் அதற்கு பிறகு சில ஆண்டுகள் கழித்து மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து மீண்டும் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இந்நிலையில், இணையத்தில் ஐஸ்வர்யா ராயின் புகைப்படம் ஒன்று அதிகம் வைரலாகி வருகின்றது.அந்தப்புகைப்படத்தைப் பார்த்து பலரும் ஐஸ்வர்யா ராயின் முகமா இப்படியா மாறியிருக்கிறது என ஆச்சரியப்பட்டு வருகிறார்கள்.50 வயதைத் தொடப் போகும் ஐஸ்வர்யா ராயின் புகைப்படத்தில் படும் வயதான தோற்றத்தில் முகத்தில் சுருக்கத்துடன் இருக்கும் புகைப்படம் தற்போது அதிகம் வைரலாகி வருகின்றது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular