Tuesday, March 11, 2025

மகளுடன் மாடர்ன் உடையில் சரண்யா பொன்வண்ணன்: ஹீரோயினை போல் எப்படி வளர்ந்துட்டாக…

- Advertisement -
- Advertisement -

நடிகை சரண்யா பொன்வண்ணன் மகளுடன் மாடர்ன் உடையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.தமிழ் சினிமாவில் நாயகன் திரைப்படத்தில் கமல்ஹாசனுடன் நடித்து பிரபலமானவர் தான் நடிகை சரண்யா பொன்வண்ணன். இந்தத் திரைப்படத்திற்குப் பிறகு இவருக்கு தொடர்ந்தும் பல வாய்ப்புகள் வர ஆரம்பித்தது.

அதன் பின் பாரதிராஜா இயக்கத்தில் கருத்தம்மா பசும்பொன் போன்ற திரைப்படங்களில் நடித்த போது அத்திரைப்படத்திற்கு உதவி இயக்குனராக இருந்த பொன்வண்ணனை காதலித்து 1995ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் இருந்த சரண்யா மீண்டும் நடிக்க வந்த போது அவருக்கு அம்மா வேடத்தில் நடிப்பதற்குதான் கிடைத்தது. பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து மீண்டும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.

சரண்யா பொன்வண்ணன் தம்பதிகளுக்கு சாந்தனி மற்றும் பிரியதர்சனி என இரு மகள்கள் இருக்கிறார்கள்.இந்நிலையில், சரண்யா அவரின் இரண்டாவது மகளுடன் வெளிநாட்டில் மாடர்ன் உடையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது அதிகம் வைரலாகி வருகின்றது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular