ஸ்டார் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகிய பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி தொகுப்பாளினியாக பிரபலமானவர் விஜே ரம்யா சுப்ரமணியன்.நட்சத்திரங்களை பேட்டி எடுத்து பட விழாக்களை தொகுத்து வழங்கியும் வந்த ரம்யா, ஓ காதல் கண்மணி, வனமகன், ஆடை, மாஸ்டர், சங்கத்தமிழன் உள்ளிட்ட பல படங்களில் நடிகையாகவும் நடித்து பிரபலமானார்.
கடந்த 2014ல் அப்ரஜித் ஜெயராமன் என்பவரை திருமணம் செய்தார். திருமணமாகி ஒரே வருடத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்தனர்.விவாகரத்துக்கு பின் தொகுப்பாளினி பணியை செய்து வரும் ரம்யா, உடற்பயிற்சி மேற்கொண்டு உடலை குறைத்து வந்தார்.
தற்போது கடின உடற்பயிற்சிக்கு பின் ஆள் அடையாளம் தெரியாமல் படுஒல்லியாக மாறி இருக்கிறார். பார்க்க குழந்தை மாதிரிக்கும் சமீபத்திய ரீல்ஸ் வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் என்ன ஆச்சி ரம்யாவுக்கு என்று ஷாக்கான ரியாக்ஷன் கொடுத்து வருகிறார்கள்.