Monday, March 10, 2025

திருமணமான உலக அழகியாக இலங்கை பெண் தெரிவு

- Advertisement -
- Advertisement -

மிஸஸ் எர்த் இன்டர்நேஷனல் 2023 பட்டத்தை அம்பாறையை சேர்ந்த 21 வயதான சஷ்மி திஸாநாயக்க வென்றுள்ளார்.45 நாடுகளைச் சேர்ந்த 60 போட்டியாளர்கள் பங்கேற்ற இந்த போட்டி 07/17 முதல் 07/22 வரை பிலிப்பைன்ஸின் மணிலாவில் நடைபெற்றுள்ளது.

இந்த போட்டி நிகழ்வில் சஷ்மி திஸாநாயக்க 04 துணைப் போட்டிகளை வென்று திருமணமான உலக அழகியாக கிரீடத்தை வென்றுள்ளார்.இந்நிலையில், சஷ்மி திஸாநாயக்க கிரீடத்தை எடுத்துக்கொண்டு நேற்று (26) காலை 09.30 மணிக்கு மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து ஏ.கே.045 ஏர்ஏசியா விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இதன்போது அவரை கணவர், பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ,பயிற்சியாளர்கள் மற்றும் ஏனைய போட்டிகளுக்கு தயாராகும் இளம் பெண்கள் குழுவும் கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்திற்கு வருகை தந்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular