நடிகை மீரா ஜாஸ்மின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 41 வயதிலும் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய நிலையில் தற்போது திடீரென கோல்ட் கலரில் சேலை அணிந்து அழகிய அழகிய தேவதையாக காட்சி அளிப்பது பெரும் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

விஜய் நடித்த ’புதிய கீதை’ விஷால் நடித்த ’சண்டக்கோழி’ மாதவன் நடித்த ’ரன்’ உள்பட பல தமிழ் படங்களிலும் நடித்தவர் நடிகை மீரா ஜாஸ்மின். இவர் தற்போது திரைப்படத்தில் நடிக்கவில்லை என்றாலும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கிறார்
என்றும் அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் ஸ்தம்பிக்க வைக்கும் அளவுக்கு லைக்ஸ்களை குவித்து வருகிறது என்பதும் தெரிந்ததே.
கடந்த சில நாட்களாக அவர் வெளியிட்ட கிளாமர் புகைப்படங்கள் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தது என்றும் கிளாமரில் உச்சத்துக்கு சென்று கொண்டிருக்கும் அவரது புகைப்படங்கள் குறித்து ஏராளமான கமெண்ட்கள் பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது.