இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். 1975 -ம் ஆண்டு கே. பாலசந்தரின் இயக்கத்தில் வெளியான அபூர்வ ராகங்கள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

ரஜினிகாந்த் சினிமாவிற்கு வந்த ஆரம்பத்தில் பல ட்ரோல்களை சந்தித்தாலும் கடின உழைப்பால் தமிழ் சினிமாவில் நம்பர் 1 இடத்தை பிடித்தார்.தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள
ஜெயிலர் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.இப்படத்தில் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அளவுக்கு கடந்தே இருக்கிறது.
ரஜினிகாந்த் கேரியரில் முக்கியமான படங்களில் ஒன்று முள்ளும் மலரும். இப்படத்தில் நடிக்கும் போது எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது சோசியல் மீடியா பக்கத்தில் வைரலாகி வருகிறது.இதோ புகைப்படம்.