Monday, March 10, 2025

பிரபுதேவாவை வெறித்தனமாக காதலித்த வனிதா : அவருக்காக என்னவெல்லாம் பண்ணியிருக்கிறார் தெரியுமா..?

- Advertisement -
- Advertisement -

பிரபுதேவாவை வெறித்தனமாக காதலித்து அவருடன் கனவில் டூயட் எல்லாம் பாடியிருப்பதாக நடிகை வனிதா விஜயகுமார் தெரிவித்திருக்கிறார்.தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவரும் மிகப் பெரிய திரைக்குடும்பத்தைச் சேர்ந்தவரும் தான் இந்த வனிதா விஜய்குமார். முதல் படமே தளபதியுடன் சந்திரலேகா எனும் திரைப்படத்தில் நடித்து பிரபலமாகியிருந்தார்.

தமிழ் சினிமாவில் சில படங்களில் மட்டுமே நடித்தவர், திருமணத்துக்குப் பின்னர் நடிப்பை கைவிட்டார். வனிதா கடந்த 2000ஆம் ஆண்டு ஆகாஷ் என்பவரைக் காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.இவர்கள் இருவருக்கும் ஸ்ரீஹரி மற்றும் ஜோவிதா என்று இரு பிள்ளைகளும் இருக்கிறார்கள். வனிதாவின் முதல் திருமண வாழ்க்கை கருத்து முரண்பாடால் பிரிய அடுத்தடுத்து இரண்டு திருமணங்களை செய்துக் கொண்டார்.

ஆனால் எந்த வாழ்க்கையும் சரியாக அமையாமல் எல்லாமே விவாகரத்தில் தான் முடிந்தது இவ்வாறு பல திருமண சர்ச்சைகளில் சிக்கிய வனிதா விஜயகுமார், தற்போது சினிமாவின் அதிக கவனத்தை செலுத்தி வருவதாகவும் அதை தான் தற்போது காதலிப்பதாகவும் அண்மையில் கூறியிருந்தார்.

இந்நிலையில், அண்மையில் அவர் கொடுத்த பேட்டியொன்றில், இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என சொல்லப்படும் நடன அமைப்பாளர் பிரபுதேவாவை வெறித்தனமாக காதலித்ததாக சொல்லியிருக்கிறார்.மேலும், பிரபு தேவா நடிப்பில் வெளியான காதலன் திரைப்படம் வெளியான போது அவரின் அனைத்து அனைத்து செய்திகளையும் புகைப்படங்களையும் சேகரித்திருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் காதலன் படத்தில் பிரபுதேவாவிற்கு ஜோடியாக நடித்த நக்மாவைப் போல தன்னை எண்ணிக் கொண்டு கனவில் அவருடன் டூயட் பாடியிருக்கிறார்.பிரபு தேவா மீது வனிதாவிற்கு இருந்த அன்பை பார்த்த விஜயகுமார் ஒரு நாள் பிரபுதேவாவை வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறார்.

அப்போது வனிதா பிரபுதேவாவிற்காக ஆசைஆசையாய் அசைவ சாப்பாடுகளை சமைத்திருக்கிறார்.ஆனால் பிரபுதேவா அசைவம் சாப்பிட மாட்டேன் என்று சொன்னதும் முட்டையை மட்டுவைத்து சமைா்ர் கொடுத்திருக்கிறார்.அதுமட்டுமல்லாமல் பிரபுதேவா அசைவம் சாப்பிடமாட்டார் என்பதற்காக வனிதாவும் சைவத்திற்கு மாறினாராம் அதன் பிறகு மீண்டும் அசைவத்திற்கு மாறிவிட்டாராம்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular