சீரியல் நடிகை ஆல்யா மானசா நேற்று தனது 28ஆவது பிறந்த நாளை குடும்பத்தோடு கொண்டாடியிருக்கிறார்.சீரியலில் பிரபல நடிகைக்கு இணையாக பார்க்கப்படுவர் தான் ஆல்யா மானசா. இவருக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.இவர் மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தி பிரபலமானார். அதற்குப் பிறகு பிரபல தொலைக்காட்சியில் ராஜா ராணி சீரியல் மூலம் அறிமுகமானார்.

அதில் தனது இயல்பான நடிப்பால் அதிகம் பிரபல்யமானார். இவர் அதே சீரியலில் இவருக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார், தற்போது இவர்களுக்கு அய்லா என்ற மகளும், அர்ஷ் என்ற மகனும் இருக்கின்றனர்.
மேலும், ஆல்யா மானசா தற்போது சன் டிவியில் இனியா எனும் சீரியலும் நடித்து வருகிறார்.இந்நிலையில் நேற்று தனது 28ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடிய புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.