Tuesday, March 18, 2025

வவுனியாவில் இடியன் துப்பாக்கியால் ஒருவர் சுட்டுக்கொலை

- Advertisement -
- Advertisement -

வவுனியா – வடக்கில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக நெடுங்கேணி பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த துப்பாக்கி சூட்டுச் சம்பவம் இன்று (21.07.2023) மாலை இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,வவுனியா வடக்கு, பட்டிக்குடியிருப்பு பகுதியில் உள்ள தனது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் மீது இடியன் துப்பாக்கியைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இதில், அப்பகுதியைச் அழகையா மகேஸ்வரன் (வயது 58) என்பவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.குறித்த சம்பவம் தொடர்பில் நெடுங்கேணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெத்துள்ளனர்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular