இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரின் மகளின் தற்போதைய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.தமிழ் சினிமாவில் நாட்டாமை,படையப்பா, முத்து, தசாதாவரம் ஆகிய திரைப்படங்களில் இயக்கி சூப்பர் ஹீட் கொடுத்தவர் தான் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்.

கோலிவுட்டில் ரவிக்குமார் என்றால் ஒரு தனி அடையாளம் இருக்கின்றது.அந்த வகையில் கோலிவுட்டில் ஸ்டாராக இருக்கும் விஜய், அஜித், ரஜினிகாந்த், கமல், விக்ரம்,சூர்யா, தனுஷ் உள்ளிட்ட அனைத்து கதாநாயகர்களுடனும் கலக்கியுள்ளார்.இந்த நிலையில் கே.எஸ்.ரவிக்குமார் கற்பகம் என்னும் பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு ஐஸ்வந்தி, மோனிஷா என 2 மகள்கள் உள்ளார்கள்.அந்த வகையில் இவரின் மகள் மோனிஷா தற்போது சென்னையில் புதிதாக அர்மோரா என்ற டெர்மடாலஜி கிளினிக்கை திறந்திருக்கிறார்,
மேலும் படிப்பை முடித்து விட்டு டாக்டர் அரவிந்தை திருமணம் செய்து கொண்டு குடும்பமாக வாழ்ந்து வருகிறார்.சமீபத்தில் கணவருடன் இருக்கும் புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.