Tuesday, March 18, 2025

தொகுப்பாளினி பிரியங்காவா இது..? ஆரம்பத்தில் எப்படி இருக்கிறாங்கனு பாருங்க

- Advertisement -
- Advertisement -

பிரபல ரிவி தொகுப்பாளினி பிரியங்கா தான் தொகுப்பாளினியாக வந்த தருணத்தில் எப்படி இருந்தார் என்ற புகைப்படம் வெளியாகியுள்ளது. பிரபல ரிவியில் தொகுப்பாளினியாக பல ஆண்டுகள் பணியாற்றி வரும் பிரியங்கா மக்களுக்கு பிடித்த தொகுப்பாளினியாக வலம் வருகின்றார்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் மாகாபா ஆனந்துடன் இணைந்து தொகுத்து வழங்கி முன்னணி விஜேவாக திகழ்ந்து வரும் இவர் சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு மக்கள் மனதில் இடம் பிடித்தார்.மேலும் பல நிகழ்ச்சிகளை சோலோ தொகுப்பாளராக இருந்து தொகுத்து வழங்கும் இவர், சமீபத்தில் ஆரம்பித்த ஸ்டார் மியூ்சிக் சீசன் 4ல் தொகுத்து வழங்குகின்றார்.

பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வரும் நிலையில், சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றினையும் நடத்தி வருகின்றார்.பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இரண்டாவது இடத்தினைப் பிடித்த பிரியங்கா தனது கணவர் குறித்து எந்தவொரு பேச்சும் பேசுவதில்லை. அடிக்கடி அவரது அம்மா மற்றும் தம்பியை குறித்தே பேசி வருகின்றார். இவரது கணவருக்கும் இவருக்கும் என்ன பிரச்சினை என்பது தற்போது வரை தெரியவே இல்லை.

தற்போது பிரபல ரிவியின் செல்லப்பிள்ளையாக இருக்கும் பிரியங்கா, ஆரம்பத்தில் தொகுப்பாளினியாக அறிமுகமாகும் போது எவ்வாறு இருக்கின்றார் என்ற புகைப்படம் வெளியாகியுள்ளது.தனது பேச்சுத் திறமையினால் இன்று பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரையும் கட்டிப்போட்டிருக்கும் பிரியங்கா முதன் முதலாக

ஒல்லி பெல்லி என்ற நிகழ்ச்சியை தான் தொகுத்து வழங்கியுள்ளார்.அந்த நிகழ்ச்சியின் போது எடுக்கபட்ட ஒரு புகைப்படம் இப்போது இணையதளத்தில் வைரலாக பகிரப்பட்டு வருவதுடன், இதனை அவதானித்த ரசிகர்கள், ‘அட, நம்ம பிரியங்காவா இது..’ என ஆச்சிரியத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular