அங்காடித் தெரு திரைப்படத்தின் மூலம் பலருக்கு பரீட்சயமானவர் தான் சிந்து. இவர் சிலகாலம் சினிமாவில் தலைகாட்டாமல் இருந்து வந்தார்.இதற்கு காரணம் இவர் கடந்த 2020ஆம் ஆண்டு மார்பக புற்றுநோயால் அவதியுற்று சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். இந்நிலையில் அவர் அண்மையில் தனது நிலை குறித்து பேட்டி ஒன்றைக் கொடுத்திருக்கிறார்.
புற்றுநோயால் போராடி அழுத்துப் போன சிந்து தினமும் கடவுளிடம் கேட்பது ஒன்று மட்டும் தான். ஒன்று என்னை நிம்மதியாக வாழ விடு இல்லையென்றால் உயிரை எடுத்துக் கொள் என்றுதானாம்.
பலருக்கும் புற்றுநோய் வந்து சரியாகி விட்டிருக்கிறது. புற்றுநோய்க்கு மருந்து இல்லை என்பது எனக்கு தெரியவே தெரியாது. முதன் முதலில் எனக்கு மார்பகத்தின் மேல் சிறிய கட்டி ஒன்று தான் வந்தது. அது வெறும் நீர் கட்டி என்று நினைத்துக் கொண்டு நானும் பேசாமல் இருந்து விட்டேன்.
ஆனால் அதற்குப் பிறகு தான் தெரிந்தது அது மார்பகப் புற்றுநோய் என்று. அதற்கு பல டெஸ்டுகள் எடுத்து மிகப் பெரிய தவறு செய்தேன். ஏனெனில் அந்த சிகிச்சைக்குப் பிறகு தான் அந்த கட்டி பரவி வலி ஏற்பட்டது.பின்னர் தான் என் நண்பர் மூலம் மருத்துவ பரிசோதனை செய்து எனது மார்பகங்களை கசாப்பு கடையில் அறுத்து போடுவது போல அறுத்து எடுத்தேன்.
இப்போதும் என்னால் 10 நிமிடத்திற்கு தான் உட்கார முடியும். அடிக்கடி இரவில் மூச்சுத்திணறல் வந்து விடும். பேசும் போது கூட மூச்சு வாங்குகிறது. அண்மையில் கூட நுரையீரலில் கூட ஓட்டைப் போட்டு மூன்று லீட்டர் தண்ணீர் எடுத்தார்கள் அவ்வளவு வலிகளை அனுபவித்து வருகிறேன்.
என்னதான் சினிமாவில் நடித்திருந்தாலும் இப்போது பெம்பர்ஸ் வாங்க கூட பணமில்லை. பத்து நாளைக்கு மாத்திரை வாங்க 6500 ரூபா செல்கிறது.மகளும் தம்பியும் தான் எனக்கு இப்போது உதவுகிறார்கள். சினிமாவில் நடித்து சம்பாதித்ததெல்லாம் எல்லோருக்கும் கொடுத்து உதவி விட்டேன். அடுத்து இன்னொரு மார்பகத்தையும் வெட்டி எடுக்க வேண்டும் அதற்காக சிகிச்சைக்கும் பணம் வேண்டும்.அதற்கு விஷால் போன்ற நடிகர்கள் எனக்கு உதவினால் போதும் என கண்கலங்கும் அளவிற்கு பேசியிருக்கிறார்.