தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களில் சத்யராஜ் ஒருவர். ‘பாகுபலி’ படத்தில் கட்டப்பாவாக அவருடைய கதாபாத்திரம் மிகவும் பேசப்பட்டது. வில்லனாக அறிமுகமாகி ஹீரோவாக வெற்றி பெற்ற நடிகர்களில் சத்யராஜூம் ஒருவர். இவர் நடிப்பில் வெளியான பூவிழி வாசலிலே, சின்னத்தம்பி பெரியதம்பி, ஜல்லிக்கட்டு, என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, வாத்தியார் வீட்டு பிள்ளை, வேலை கிடைச்சிருச்சு போன்ற பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி அடைந்தது.

சமீபத்தில் சத்யராஜ் நடிப்பில் ‘லவ் டுடே’ திரைப்படம் வெளியாகி மக்களிடம் நல்ல விமர்சனத்தையும் வரவேற்பையும் பெற்றது. நடிகர் சத்யராஜ் மகேஸ்வரி என்பவரை 1979ல் திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு சிபிராஜ் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர். தற்பொழுது நடிகர் சத்யராஜின் இதுவரை பலரும் பார்த்திராத அரிய புகைப்படங்களை இங்கு நாம் பார்க்கலாம்.