Tuesday, March 18, 2025

காதல் கணவருடன் பிரிவு! ரக்ஷிதா டாட்டூ போட்டுருக்க இடத்தை பார்த்தீர்களா..?

- Advertisement -
- Advertisement -

பிக்பாஸ் பிரபலமும், சீரியல் நடிகையுமான நடிகை ரக்ஷிதா போட்டுள்ள புதிய டாட்டூ வைரலாகி வருகின்றது.கன்னட சீரியல் நடிகையான ரக்ஷிதா மஹாலக்ஷ்மி, பிரபல டிவியில் ஒளிபரப்பான ‘பிரிவோம் சந்திப்போம்’ என்கிற தொடர் மூலம் தமிழில் அறிமுகமானார்.

பிரபல சீரியல் நடிகையாக வலம் வருபவர் ரக்ஷிதா. பல தொடரில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். ‘பிரிவோம் சந்திப்போம்’ என்ற தொடரில் ஜோடியாக நடித்த தினேஷை ரக்ஷ்தா காதலித்து கடந்த 2013ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் செய்து கொண்ட பிறகு இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். சமீபத்தில் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற ரக்ஷிதாவை வனிதாவின் முன்னாள் கணவரான ராபர்ட் மாஸ்டர் ஒருதலையாக காதலித்து வந்தார்.

பின்பு பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியே வந்த இவர், தனது கணவரால் அடுத்தடுத்து பல தொல்லைகளை சந்தித்து வருகின்றார். தற்போது விவாகரத்து வரை சென்றுள்ள இவர்களின் வாழ்க்கையில் தினேஷ் சேர்ந்து வாழ தயாராக இருந்தாலும், ரக்ஷிதா வாழ மறுப்பு தெரிவித்து வருகின்றார்.

சமீபத்தில் கூட, தினேஷ் மீது ரக்ஷிதா பொய் புகார் கொடுத்ததாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. தன்னை சுற்றி பல பிரச்சினைகள் காணப்பட்டாலும் தனது வேலையை மகிழ்ச்சியாக பார்த்து வருகின்றார்.

தற்போது திரிஷாவிற்கே டஃப் கொடுக்கும் விதத்தில் ஆந்தையின் உருவத்தை நெஞ்சில் டாட்டூ போட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது பெரும் வைரலாகி வருகின்றது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular