Monday, March 17, 2025

இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் ஓய்வூதிய நடைமுறைப்படுத்தலில் வவுனியா மாவட்டத்திற்கு மீண்டும் தேசிய விருது..!

- Advertisement -
- Advertisement -

இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் 2022 ஆண்டுக்கான ஓய்வூதிய நடைமுறைப்படுத்தலில் வவுனியா மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட இலக்கினை பூர்த்தி செய்த அடிப்படையில் தேசியரீதியில் இவ் விருது வழங்கப்பட்டது.

இவ் தேசிய விருதினை சமூக பாதுகாப்பு சபையின் தலைவர் அவர்கள் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திரு P.A.சரத்சந்ர அவர்களின் சார்பாக மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் திருமதி.ஆரணி தவபாலன் அவர்களிடம் வழங்கி வைத்திருந்தார்.

மேலும் வவுனியா மாவட்ட, திட்டமிடல் பணிப்பாளர் திருமதி உதயமலர் பிரைசூடி, மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் திருமதி.ஆரணி தவபாலன், சமூக பாதுகாப்பு சபையின் மாவட்ட இணைப்பதிகாரி திரு.இராமராதன் ரமேஸ் ஆகியோர் இவ் அடைவுமட்டத்திற்க்கான தேசிய விருது வழங்கி கெளரவிக்கப்பட்டிருந்தனர்.

2022 ஆம் ஆண்டில் உத்தியோகத்தர்கள் அடிப்படையில் தேசிய மட்ட இலக்கினை பூர்த்திசெய்தமைக்காக
வெங்கலசெட்டிக்குள பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களான திரு கதிரவேல் பிறேம்குமார் மற்றும் திரு ரபீக் முகமட் சரூன் ஆகியோருக்கும் தேசிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular