மாவீரன் பட நடிகை அதிதி ஷங்கரின் நியூ லுக் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. டாக்டர் படிப்பை முடித்துவிட்டு சினிமாவில் அதிக ஆர்வம் இருந்த காரணத்தினால் தனது தந்தையின் ஆதரவுடன் சினிமாவிற்குள் நுழைந்த அதிதி சங்கர் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து கலக்கி வருகிறார்.

அந்த வகையில் இவர் பிரபல இயக்குனர் ஷங்கரின் இளைய மகள் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் இவர் கார்த்தி நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த விருமன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோயினாக அறிமுகமானார். இயக்குனர் சங்கரின் மகள் என்பதால் எடுத்தவுடன் முன்னணி நடிகரின் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்த நிலையில் மேலும் இதனை அடுத்து தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று வருகிறார்.
அப்படி சிவகார்த்திகேயன் நடிப்பில் சில தினங்களுக்கு முன்பு வெளியான மாவீரன் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து அசத்தியுள்ளார். இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது வசூல் ரீதியாகவும் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்துள்ளது.
இவ்வாறு இவருடைய நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு வரும் நிலையில் அதேபோல் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார் அப்படி தொடர்ந்து தனது புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில் இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளம் உருவாகி இருக்கிறது.
அந்த வகையில் தற்பொழுது மிகவும் க்யூடாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் லைக்குகளும், கமெண்டுகளும் குவிந்து வரும் நிலையில் அதேபோல் சோசியல் மீடியாவிலும் வைரலாகி வருகிறது இதோ அந்த புகைப்படங்கள்.