தமிழ் சினிமாவில் இன்று நம்பர் ஒன் நடிகையாக வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இவர் திருமணத்திற்கு முன்பும் பின்பும் சரி, டாப் ஹீரோக்களின் படங்களில் நடிப்பது இல்லை என்றால் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்து தனது மார்க்கெட்டை தொடர்ந்து தக்க வைத்துக்கொண்டே வருகிறார் தற்பொழுது.

இதனால் ஒரு படத்திற்கு ஆறு கோடி மேல் சம்பளம் வாங்கும் நடிகை என்ற அந்தஸ்தையும் இவர்தான் பெற்றிருக்கிறார் இப்படிப்பட்ட நடிகை நயன்தாரா வாய்ப்பு இல்லாத சமயங்களில் படங்களில் வெறும் ஐட்டம் பாடலுக்கு மட்டும் நடனம் ஆடி உள்ளார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..
1. சிவாஜி : ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்து பட்டைய கிளப்பிய திரைப்படம் சிவாஜி.. இந்தப் படத்தில் முதல் பாடலான பல்லேலக்கா பாடலுக்கு ரஜினியுடன் இணைந்து நயன்தாரா நடனமாடி இருப்பார் அந்த பாடல் பெரிய வரவேற்பு பெற்றதை தொடர்ந்து அடுத்தடுத்த பட வாய்ப்பை லேடி சூப்பர் ஸ்டார் அள்ளினார்.
2. சிவகாசி : பேரரசு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான இந்த படத்தில் இடம் பெற்ற கோடம்பாக்கம் ஏரியா பாடலில் நடிகை நயன்தாரா செம குத்து குத்து இருப்பார் இந்த படத்தில் வரும் பாடல்கள் அனைத்துமே வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
3. 20 : மலையாளத்தில் வெளியான இந்தப் படத்தில் நடிகை நயன்தாரா ஹே தில் திவானா என்ற பாடலு இறங்கி ஆட்டம் போட்டு இருந்தார். பாடல் வெளிவந்து பெரிய ஹிட் அடித்தது இந்த படத்தில் மோகன்லால், சுரேஷ்கோபி, ஜெயராம், மம்முட்டி மற்றும் பலர் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.