Monday, March 10, 2025

16 வயதில் திருமணம்… 2 முறை விவாகரத்து… மாவீரன் சரிதாவின் வாழ்க்கையில் ஏற்பட்ட சோகம்!

- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவில் ஆரம்பம் முதல் இன்று வரைக்கும் எத்தனையோ நடிகர் நடிகைகள் வந்து நடித்து கலைத்துப்போய் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் அப்படி சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டவர் தான் சரிதா.சினிமாவில் என்னதான் கொடிக்கட்டிப் பறந்தாலும் அவரின் வாழ்க்கையில் அத்தனை சோகங்கள் இருந்துக் கொண்டுதான் இருக்கிறது. அப்படி சரிதாவின் வாழ்வில் ஏற்பட்ட சோகம் என்ன தெரியுமா?

1978ஆம் ஆண்டு தப்பு தாளங்கள் என்ற திரைப்படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானவர் தான் நடிகை சரிதா. இவர் நடித்த இந்த முதல் திரைப்படத்திலேயே தன் அழகாலும் தன் நடிப்புத்திறமையாலும் இவருக்கென பல ரசிகர்களை சேகரித்துக் கொண்டார்.இவரின் நடிப்புதிறமையைப் பார்த்து அப்போதிருந்த உச்ச நடிகர்கள் எல்லோருடனும் ஜோடி போட்டு நடித்திருக்கிறார். திருமணம் செய்துக் கொண்டு சினிமாவில் இருந்து ஒதுங்கிய சரிதா 2001ஆம் ஆண்டு வெளியான பிரண்ட்ஸ் படத்தில் விஜய்க்கு தாயாக நடித்திருந்தார்.

அதற்குப் பிறகு இப்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் திரைப்படத்தில் மீண்டும் நடிப்பதற்காக வந்திருக்கிறார்.சரிதா வெங்கட சுப்பையா என்பவரை 1975ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்ட இவர் 1976ஆம் ஆண்டு விவாகரத்துப் பெற்றிருக்கிறார்.அதற்குப் பிறகு சினிமாவில் அதி கவனம் செலுத்திய நடிகை சரிதா 1988ஆம் ஆண்டு பிரபல மலையாள நடிகர் முகேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இவர்கள் இருவருக்கும் ஷர்வன், தேஜஸ் என்று இரண்டு மகன்களும் இருக்கிறார்கள்.

ஆனால் இவர்கள் இருவருக்கும் கருத்து முரண்பாடு ஏற்பட 2011ஆம் ஆண்டு விவாகரத்துப் பெற்று பிரிந்து விட்டார்கள். திருமணம் செய்துக் கொண்ட பிறகு நடிக்க கூடாது என்றதற்காகத் தான் இவர்கள் பிரிந்து விட்டார்கள் என்றும் சொல்லப்படுகிறது. இரண்டாவது முறை பெற்ற விவாகரத்தால் அதிகம் மனமுடைந்துப் போன சரிதா சினிமாவை விட்டு மொத்தமாக விலகியிருக்கிறார்.

இவர் சிறுவயதில் இருந்து பல கஷ்டங்களை அனுபவித்து தான் வளர்ந்திருக்கிறார் திருமணத்திலும் நிம்மதியில்லாத காரணத்தால் தான் இவர் நடிப்பில் அதிக கவனம் காட்டி வெற்றியும் பெற்றிருக்கிறார்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular