Friday, April 4, 2025

அழுது அடம்பிடிச்சா தான் பார்த்திபன் விடுவாரு – மனம் திறந்த நடிகை சீதா

- Advertisement -
- Advertisement -

பார்த்திபனின் முன்னாள் மனைவி சீதா சில தகவல்கள் பகிர்ந்துள்ளார்.நடிகை சீதா பார்த்திபனுடன் காதல் வயப்பட்டு கடந்த 1990 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். அதையடுத்து, 2002 ஆம் ஆண்டு வேலன் சீரியலில் நடித்த போது அதில் நடித்த சீரியல் நடிகர் சதீஷுடன் காதல் ஏற்பட்டு 2010ல் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த திருமணமும் 2016ல் விவாகரத்தில் முடிந்தது. இந்நிலையில் சமீபத்தில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், 1989-ம் ஆண்டு வெளியான புதிய பாதைபடம் எனக்கு பெரிய திருப்புமுணையாக அமைந்தது. இந்த படத்தில் நடிக்கும்போது பார்த்திபனுடன் காதலும் மலர்ந்தது.

அவரை காதலித்தபோது ஒவ்வொரு நாளும் த்ரில்லாக இருந்தது. படப்பிடிப்பு இடையில் யாருக்கும் தெரியாமல் வெளியில் சென்று அவருக்கு போன் செய்து ஒரு நிமிடம் பேசிவிட்டு வருவேன். அதற்குள் இங்கு எல்லோரும் எங்கே போன என்று கேட்டுவிடுவார்கள்.பார்த்திபன் ரொம்ப ஸ்ரிக்ட்.

வெளியிலே விடமாட்டார். குழந்தைக்கு எக்ஸாம் இருக்கு அதை பாரு என்று சொல்லிவிடுவார். அதன்பிறகு அழுது அடம் பிடித்து சொல்வேன். அழுதபிறகுதான் விடுவார். ஆனால் அவருடன் இருந்த ஒவ்வொரு நாளும் நான் மகிழ்ச்சியாகதான் இருந்தேன் எனக் கூறியுள்ளார்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular