Monday, March 10, 2025

ஷகிலாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர்.. பளார் என அரைந்த சம்பவம்

- Advertisement -
- Advertisement -

நடிகை ஷகிலா தன்னுடைய வாழ்க்கையில் நடந்த ஏராளமான தகவல்களை யூடியூப் சேனல் மூலம் பகிர்ந்து வரும் நிலையில் தற்போது தனது வாழ்க்கையில் சந்தித்த மிகவும் மோசமான சம்பவத்தை பற்றி கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 90 காலகட்டத்தில் கவர்ச்சியின் நடிகையாக வலம் வந்த நடிகை ஷகிலாவிற்கு தனி ஒரு ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.இவர் மலையாளத்தின் மூலம் கவர்ச்சி நடிகையாக மாறிய நிலையில் இவருடைய படங்களை வெளியிட முன்னணி நடிகர்கள் தயங்குவார்களாம். ஆனால் இயக்குனர்கள் தங்களுடைய படத்தில் ஒரு காட்சியிலாவது ஷகிலா நடிக்க வேண்டும் விரும்புவார்களாம் அப்படி தொடர்ந்து மலையாளத்தில் இவருக்கு எதிரான சதிகள் நடக்க இதற்கு மேல் மலையாளத்தில் நடிக்க கூடாது என முடிவெடுத்தாராம்.

எனவே தான் வாங்கி இருந்த அட்வான்ஸ் பணத்தையும் மீண்டும் கொடுத்ததால் தனது மொத்த மார்க்கெட்டையும் இழந்து உள்ளார். அதன் பிறகு தான் தமிழ் படங்களில் கவர்ச்சியாக நடிக்க தொடங்கியுள்ளார் இவ்வாறு ஷகீலா என்றாலே ஆபாச நடிகை, கவர்ச்சி நடிகை என்ற நிலை இருந்து வந்த நிலையில் தற்போது அது மொத்தமாக மாறி உள்ளது.

அதாவது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெற்றதன் மூலம் இவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அதாவது இந்நிகழ்ச்சியின் மூலம் அம்மாவாக மாறிய நிலையில் அனைவரும் ஷகிலா அம்மா என அழைத்து வருகின்றனர் இதனால் மகிழ்ச்சியாக இருப்பதாக சமீப பேட்டியில் கூறியிருந்தார். மேலும் இதனை அடுத்து தன்னிடம் தவறாக நடந்துக் கொண்ட மருத்துவர் குறித்து பேசியுள்ளார்.

அதில் தன்னுடைய அம்மாவிற்கு உடல் நலம் சரியில்லை என மருத்துவமனைக்கு ஷகிலா அழைத்து செல்லும் பொழுது அங்கு இருக்கும் மருத்துவர் எழுதிய எழுத்துக்கள் சரியாக புரியாததால் அது பற்றி கேட்டுள்ளார். திடீரென ஷகிலாவின் பக்கத்தில் அந்த மருத்துவர் தொடக்கூடாத இடத்தில் தொட்டு என்ன சந்தேகம் என கேட்டுள்ளார்.

அந்த மருத்துவரின் செயலால் உச்சகட்ட கோபமடைந்த ஷகிலா உடனே அறைந்து பயங்கரமாக திட்டி வெளுத்தெடுத்துள்ளார். அவரின் சத்தத்தை கேட்டு வெளியே இருந்த செவிலியர் உள்ளே வந்து ஷகிலாவை சமாதானம் செய்து அனுப்பி வைத்தாராம் இந்த சம்பவத்தைப் பற்றி கூறி அனைத்து துறையிலும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைகள் உள்ளது என தெரிவித்துள்ளார் ஷகிலா.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular