தொம்பே – கேரகல, புதுபாகல பிரதேசத்தில் வாழைப்பழம் தொண்டையில் சிக்கி 8 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.கடந்த 9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பாடசாலை இடைவேளையில் வாழைப்பழம் சாப்பிட்டுக்கொண்டிருந்த போது தொண்டையில் சிக்கியுள்ளது.
இதனை தொடர்ந்து பாடசாலையின் ஆசிரியர்களால் தொம்பே ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக கம்பஹா பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
கம்பஹா வைத்தியசாலையில் 5 நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
நான்கு சகோதரிகளைக் கொண்ட குடும்பத்தில் மூன்றாவது குழந்தையான கே.பி. கித்மினி ஹெஷாரா படிப்பிலும், ஏனைய கல்வி செயல்பாடுகளிலும் சிறந்து விளங்கியதாக அவரது பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர்.