தாய் உயிரிழந்த நிலையில் தந்தைதான் தன்னை பாதுகாத்து வளர்ப்பார் என நம்பி அவருடன் வாழ்ந்து வந்த ஏழு வயதே ஆன பச்சிளம் பிஞ்சுவை பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கிய தந்தை அவருடன் கூடவே மாமனாரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு தலைமையக காவல்துறை பிரிவிலுள்ள பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த சம்பவத்தில் 49 வயதான தந்தையும் 52 வயதான மாமனாரும் இணைந்து சிறுமியை கூட்டாக பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கிய நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரும் மட்டக்களப்பு பதில் நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 27 ஆம் திகதி வரை இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
அத்துடன் சிறுமியை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு உத்தரவிட்டதற்கிணங்க அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.