நடிகர் சரத்குமாரக்கு அவரது மனைவி ராதிகா முத்தம் கொடுத்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக நடிகர் சரத்குமாரும், நடிகை ராதிகாவும் வலம் வருகிறார்கள். சமீபத்தில் நடிகர் சரத்குமார் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஏற்று நடித்தார்.

இவருடைய நடிப்பு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பல ஹிட் படங்களை கொடுத்த நடிகர் சரத்குமார், வில்லன், குணச்சித்திர நடிகராகவும் நடித்துள்ளார். தற்போது தமிழக அரசியலும் ஈடுபட்டு வருகிறார்.இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.அந்த புகைப்படத்தில் நேற்று நடிகர் சரத்குமார் தன் 69வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அப்போது, தன் கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய ராதிகா, அவருக்கு அன்பு முத்தம் கொடுத்தார்.
தற்போது இது தொடர்பான புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தும், இவர்களின் அன்பையும் பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.