Tuesday, April 1, 2025

ஹிப் ஹாப் ஆதியின் மனைவியா இது..? பார்க்க ஹீரோயினி போல் இருக்காங்களே வைரலாகும் புகைப்படங்கள்

- Advertisement -
- Advertisement -

பொதுவாக சினிமாவில் ஏதாவது ஒரு துறையில் நுழைந்து இன்று நடிகராக உள்ளவர்கள் பலரும் உள்ளனர். அதாவது ஜிவி பிரகாஷ் மற்றும் விஜய் ஆண்டனி உள்ளிட்ட பலரும் இசையமைப்பாளராக இருந்து தற்போது நடிகராக மாறியுள்ளனர்.அந்த வரிசையில் இசையமைப்பாளராக இருந்து தற்போது நடிகராக இருப்பவர் தான் ஹிப் ஹாப் தமிழா என்று அழைக்கப்படும் ஆதி.

இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் முதலாக தமிழ் சினிமாவிற்குள் படங்களில் இசை அமைக்க தொடங்கினார். அதற்கு முன்பு வரை இவர் நிறைய ஆல்பம் பாடல்கள் வெளியிட்டுள்ளார்.அதன் மூலம் இவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது. அது மட்டுமல்லாமல் அனிருத் ஹிப்ஹாப் பாதையை வணக்கம் சென்னை என்ற படத்தில் சென்னை சிட்டி கேங்ஸ்டார் என்ற பாட்டு மூலம் திரை உலகிற்கு அறிமுகப்படுத்தினார்.

அதன் பிறகு இயக்குனர் சுந்தர்.சி யின் ஆம்பள திரைப்படத்தில் பாடுவதற்கு ஆதிக்கு வாய்ப்பு கிடைத்தது. பின்னர் தனி ஒருவன்,இமைக்கா நொடிகள் மற்றும் அரண்மனை உள்ளிட்ட பல திரைப்படங்களில் ஆதி பாடியுள்ளார்.மேலும் மீசைய முறுக்கு என்ற திரைப்படத்தின் மூலம் இவர் முதன் முதலாக ஹீரோவாக அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து நட்பே துணை மற்றும் நான் சிரித்தால் உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.

இன்று தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமில்லாமல் இசையமைப்பாளர், இயக்குனர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் என பன்முகம் கொண்ட கலைஞராக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.இவரின் நடிப்பில் வெளியான படங்கள் மட்டும் பாடல்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அதே சமயம் கடந்த வருடம் சிவகுமாரின் சபதம் என்ற திரைப்படத்தில் இவர் நடித்திருந்த நிலையில் இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.அதே சமயம் அன்பு அறிவு என்ற திரைப்படத்திலும் இவர் இரட்டை வேடத்தில் நடித்து அசத்தியிருந்தார். இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் ஹிப்பாப் ஆதி யூட்யூபில் தனியாக ஒரு சேனலை நடத்தி வருகிறார்.

அதில் இவரை மில்லியன் கணக்கான ரசிகர்கள் பின்தொடர்கின்றனர். இதனிடையே ஹிப்பாப் ஆதி லட்சயா என்ற பெண்ணை திருப்பதியில் மிக எளிமையான முறையில் உறவினர்கள் முன்பு திருமணம் செய்து கொண்டார். தற்போது ஹிப்ஹாப் ஆதியின் மனைவி மற்றும் அவரின் குடும்ப புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular