வவுனியாவிற்கு ஜனாதிபதியின் விஜயத்தினையடுத்து பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு – எதிர்ப்பு போராட்டங்களும் இடம்பெறவுள்ளது.

வவுனியாவிற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (19.11.2022) காலை வருகை தரவுள்ளமையினையடுத்து நகரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.அரச அதிகாரிகளுடனான கலந்துரையாடல் மற்றும் இணைப்பு காரியாலயம் திறந்து வைப்பு போன்ற பல நிகழ்வுகளில் ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ள நிலையிலேயே இவ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி விஜயம் மேற்கொள்ளவுள்ள பகுதிகளில் வெ டிகு ண்டு தகர்ப்பு பாதுகாப்பு பிரிவினர்,விசேட அதிரடிப்படையினர் , இரானுவம்,பொலிஸார் என பலதரப்பினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன்,ஜனாதிபதியின் வருகைக்கு

எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்திலும் ஈடுபடவுள்ளனர்.இந்நிலையில் போராட்டங்களை தடுக்கும் முகமாகவும் கலக்கம் தடுக்கும் பொலிஸாரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More