மீண்டும் திரைப்படத்தில் நடிக்க வந்த கமல்ஹாசனின் இரண்டாவது மனைவி சரிகா…! வெளியான போஸ்டர்

தமிழ் சினிமாவில் எத்தனையோ பல புதுமுக நடிகர்கள் தற்போது வந்த போதிலும் அவர்களுக்கு எல்லாம் சவால் விடும் வகையில் இன்றைக்கும் இமையுடன் பல முன்னணி படங்களில் பல மாறுபட்ட கதைகளை தேர்வு செய்து நடித்து வருபவர் பிரபல முன்னணி நடிகர் உலகநாயகன் கமல் ஹாசன்.தனது சிறுவது முதலே திரைத்துறையில் கால்பதித்த கமல் தனது முதல் படமான களத்தூர் கண்ணம்மா படத்திலேயே சிறுவயது தோற்றத்தில் சிறப்பாக நடித்து மக்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் தனக்கான தனி அடையாளத்தையும் பிரபலத்தையும் ஏற்படுத்தி கொண்டார்.இதனை தொடர்ந்து வளர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து தற்போதும் தொடர்ந்து ஹீரோவாக நடித்து கலக்கி வருகிறார்.

மேலும் வெள்ளித்திரையை தொடர்ந்து சின்னத்திரை பக்கம் கவனத்தை திருப்பிய கமல் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ்

நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.இதனை தொடர்ந்து சினிமா ஒரு பக்கம் இருந்தாலும் பொதுநலன் மிகுந்த அக்கறை கொண்ட கமல் தற்போது அரசியலிலும் தனது பங்களிப்பை கொடுத்து வருகிறார்.தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாகவும்,

உலகநாயகன் என இந்தியளவில் கொண்டாடப்படும் சிறந்த நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் கமல்ஹாசன்.இவர் நடிப்பில் கடைசியாக வெளியான விக்ரம் திரைப்படம் வரலாறு காணாத வசூல் சாதனைகளை நிகழ்த்தியது.இப்படத்தை தொடர்ந்து கமல் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

கமல்ஹாசனுக்கு இரண்டு முறை திருமணம் ஆனது அனைவரும் அறிந்த விஷயம்,அதன்படி நடிகை சரிகாவை கமல்ஹாசன் கடந்த 1988 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பின்னர் சில வருடங்கள் சேர்ந்து வாழ்ந்த இவர்கள் 2004 ஆம் ஆண்டு பிரிந்துவிட்டனர்.

மேலும் இவர்களுக்கு பிறந்த இரண்டு மகள் தான் ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன்.இந்நிலையில் கமல்ஹாசனின் முன்னாள் மனைவியான சரிகா பல வருடங்கள் கழித்து மீண்டும் திரைப்படத்தில் நடித்துள்ளார்,UUNCHAI என பெயரிடப்பட்டுள்ள அப்படத்தின் அதிகாரபூர்வ போஸ்டர் வெளியாகியுள்ளது.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More