ஏழை மாணவர்களின் கல்விக்காக ஏலத்திற்கு வரும் நடிகையின் புடவைகள் : வெளியாகிய தகவல்..? யார் அந்த நடிகை தெரியுமா..?

இந்தியத் திரைப்படத் துறையில் புகழ்பெற்ற நடிகை ஸ்ரீதேவி. 1967-ம் ஆண்டு ‘கந்தன் கருணை’ என்ற தமிழ்த் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய இவர்,பாரதிராஜாவின் ‘16 வயதினிலே’ படத்தின் மூலம் கதாநாயகியாகப் பிரபலமானவர்.தமிழ்,இந்தி, மலையாளம்,தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற பல மொழி திரைப்படங்களில் தன்னுடைய நடிப்புத் திறனை வெளிப்படுத்தியவர் நடிகை ஸ்ரீதேவி.அனைவருடைய மனதிலும் நீங்கா இடம் பிடித்த இவருக்கு 2013-ம் ஆண்டு குடியரசு தினத்தன்று மத்திய அரசால் ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கப்பட்டுள்ளது.

போனி கபூரைத் திருமணம் செய்துகொண்ட ஸ்ரீதேவி சினிமாவைவிட்டு சிறிது காலம் விலகியிருந்தார்.பின் ஆறு ஆண்டுகள் கழித்து ஒன்றிரண்டு தொலைக்காட்சி தொடர்களில்

நடித்து வந்த ஸ்ரீதேவி,14 ஆண்டுகளுக்குப் பிறகு ‘இங்கிலீஷ் விங்கிலிஷ்’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் திரைப்படத் துறையில் கால்பதித்தார்.இப்படம் தமிழிலும்,இந்தியிலும் ஒரே நேரத்தில்

தயாரிக்கப்பட்டு 2012-ம் அண்டு வெளியிடப்பட்டது.பிறகு தெலுங்கிலும்,தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இப்படத்தை கௌரி ஷிண்டே இயக்கியிருந்தார்.‘இங்கிலீஷ் விங்கிலிஷ்’ படம் வெளியாகி

10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இப்படத்தில் ஸ்ரீதேவி அணிந்திருந்த புடவைகள் அனைத்தையும் ஏலத்தில் விட முடிவு செய்து இருப்பதாக இயக்குநர் கௌரி ஷிண்டே தெரிவித்துள்ளார்.இதன் மூலம் கிடைக்கும் தொகையை

ஏழை சிறுமிகளின் கல்விக்காக உதவும் தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கவிரு ப்பதாக கௌரி ஷிண்டே தெரிவித்துள்ளார்.இதனைத் தொடர்ந்து இவரது இந்த அறிவிப்பிற்குப் பலரும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More