பரமக்குடியில் இருந்த நடிகர் கமல்ஹாசனின் சொந்த வீட்டை பார்த்துள்ளீர்களா…? அழகிய வீடு இதோ..?

தமிழ் திரையுலகில் தனது சிறுவயதிலேயே தனது நடிப்பு திறமையால் பலரது கவனத்தை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் பிரபல முன்னணி நடிகர் உலகநாயகன் என்று எல்லாராலும் அழைக்கப்படும் கமல்ஹாசன்.இவர் நடித்திராத கதைகளே இல்லை எனலாம் அந்த அளவிற்கு மாறுபட்ட கதையம்சங்கள் கொண்ட பல வெற்றி படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென நீங்காத ஒரு இடத்தையும் அடையாளத்தையும் ஏற்படுத்தி கொண்டார்.இந்நிலையில் இத்தனை வயதை கடந்த நிலையிலும் இன்னமும் இளமை குறையாமல் பல இளம் நடிகர்களுக்கு சவால் விடும் வகையில் போட்டியாக தொடர்ந்து ஹீரோவாக நடித்து வருகிறார்.

தமிழ் சினிமா ஏன் இந்திய சினிமாவே போற்றும் ஒரு மிகச் சிறந்த நடிகர்.எல்லோரும் வந்தோம்,நடித்தோம் என்று இருப்பார்கள்,ஆனால் கமல்ஹாசன் நடிப்பை தாண்டி ஏதாவது ஒரு விஷயத்தை தனது ரசிகர்களுக்கு காட்டியே ஆக வேண்டும்

என படத்துக்கு படம் அனைவரையும் வியக்க வைத்தார்.தொழில்நுட்பத்தில் கமல்ஹாசன் அவர்கள் தான் முன்னோடியாக இருந்துள்ளார், இப்போது வியந்து பார்க்கும் விஷயங்கள் பலவற்றை அவர் அந்த காலத்திலேயே முயற்சி செய்து வெற்றிப்பெற்றிருக்கிறார்.

சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் தாறுமாறான வசூலை பெற்றது,அடுத்து இந்தியன் 2 படத்திற்காக ரசிகர்கள் வெயிட்டிங்.இதன் இடையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்க இருக்கும் பிரம்மாண்ட

நிகழ்ச்சியான பிக்பாஸ் 6 வது சீசன் நாளை ஒளிபரப்பாக உள்ளது.நடிகர் கமல்ஹாசன் அவர்களின் பூர்வீகம் பரமக்குடி என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

ஆனால் அங்கு உள்ள அவரது சொந்த வீடு இப்போது அவரிடம் இல்லை.சிறந்த ரசிகர்,PT வாத்தியாருமான தமிழரசன் என்பவரிடம் விற்றுவிட்டாராம்.இதோ அவரது வீட்டின் புகைப்படம்,

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More