ஐஸ்வர்யா ராய் நடித்த நந்தினி கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்த மார்க்கெட் இழந்த நடிகை

பொன்னியின் செல்வன் படத்தில் நடிகை ஷாலினி நடித்து இருப்பதாக கூறும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது.பல ஆண்டு கனவான ஆகி சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் கதை தற்போது திரைப்படமாக உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் மணிரத்னம்.இவர் வித்யாசமான கதைகளை இயக்கி சினிமா உலகிற்கு கொடுப்பதில் கைத்தேர்ந்தவர். அந்த வகையில் இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப்படம் ஆன ‘பொன்னியின் செல்வன்’ நீண்ட வருடங்களுக்கு பிறகு உருவாகி இருக்கிறது.

பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது.மணி ரத்னம் இயக்கியிருந்த இப்படத்தில் விக்ரம்,ஐஸ்வர்யா ராய், திரிஷா,பிரபு,சரத்குமார்,கார்த்தி,ஜெயம் ரவி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

லைகா நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.முதல் ஷோவில் இருந்து சிறந்த வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்று வரும் இப்படம் வசூலில் சக்கப்போடு போட்டு வருகிறது.

இப்படத்தில் மிகமுக்கியமான ஒரு கதாபாத்திரம் தான் ஐஸ்வர்யா ராய் நடித்த நந்தினி.இந்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் மணி ரத்னம் தேர்ந்தெடுத்தது நடிகை அனுஷ்கா தானாம்.

2011ஆம் ஆண்டு பொன்னியின் செல்வன் துவங்கிய போது நந்தினி கதாபாத்திரத்தில் அனுஷ்காவை நடிக்க வைக்க மணி ரத்னம் முடிவெடுத்துள்ளார்.

ஆனால்,அதன்பின் அப்படம் ட்ராப் ஆகிவிட்டது.நடிகை அனுஷ்கா தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More