லூ சு பெண்ணே பாடலை இந்த நடிகையை நினைத்து தான் எழுதினாராம் சிம்பு..? யார் அந்த நடிகை தெரியுமா…?

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக தனது திரைபயனத்தை தொடங்கிய பல நடிகர்கள் நடிகைகள் தற்போது வளர்ந்து சினிமாவில் முன்னணி நடிகர் நடிகைகளாக வலம் வந்த வண்ணம் உள்ளனர்.அந்த வகையில் தனது கலைபயனத்தை குழந்தை நட்சத்திரமாக துவங்கி தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகர் சிம்பு.வாரிசு நடிகராக சினிமாவில் நுழைந்த இவர் தற்போது சினிமா வட்டாரத்தில் தனக்கென தனி அடையாளத்தையும் தனி ரசிகர் பட்டளாத்தையும் உருவாக்கி கொண்டார்.

இந்நிலையில் பல படங்களில் பிசியாக நடித்த வந்த சிம்புக்கு போதாத காலமாக பல வருடங்களாக பட வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் பல காலம் கழித்து தற்போது மீண்டும் திரையுலகில் காலடி வைத்த சிம்பு

சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற மாநாடு படத்தின் மூலம் மீண்டும் தனது மார்க்கெட்டை சரிசெய்து கொண்டார். இப்படி இருக்கையில் இந்த படத்திற்கு முன்னர் ஈஸ்வரன் படத்தில் ஹீரோவாக சிம்பு நடித்து இருந்தார்.

சிம்பு நடிப்பில் வெளிவந்த படங்களில் ஒன்று வல்லவன்.இப்படத்தில் இடம்பெற்ற பாடல் தான் லூசு பெண்ணே.யுவன் ஷங்கர் இசையமை த்திருந்த இப்பாடலை சிம்புவே எழுதி,பாடியிருந்தார்.

அன்று முதல் இன்று வரை சிம்பு என்றால் கண்டிப்பாக அனைவருக்கும் இந்த லூ சு பெண்ணே பாடல் நினைவுக்கு வரும்.இந்நிலையில், இந்த பாடலை நடிகை திரிஷாவை நினைவில் வைத்து தான் நடிகர் சிம்பு எழுதினாராம்.

விளையாட்டாக இப்படி கூறிவிட்டு அதன்பின் சும்மா தான் சொன்னேன் என்று கூறியுள்ளார் சிம்பு.பல வருடங்களுக்கு முன் எடுத்த இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.இதோ அந்த வீடியோ.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More