சினிமா வாய்ப்பை தட்டி தூ க்கிய தாமரை..! ஹீரோயினாக நடிக்கிறாரா..? பிரபல நடிகருடன் ஜோடியாக வெளியான புகைப்படம்

தமிழில் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு உலக அளவில் பலர் ரசிகர்களாக இருந்து வருகிறார்கள் இதன் காரணமாக இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக நான்கு சீசன்களை முடித்து தற்போது ஐந்தாவது சீசனின் இறுதி வாரத்தை நோக்கி பயணித்து வருகிறது.இந்நிலையில் இந்த சீசனில் பல முகம் தெரியாத பிரபலங்கள் போட்டியளர்களாக கலந்து கொண்டனர் இதனை தொடர்ந்து இவர்களில் ஒருவராக இதில் கலந்து கொண்டவர் நாடக கலையை சேர்ந்த தாமரைச்செல்வி.சாதாரணமான குடும்பத்தை சேர்ந்த இவர் அவ்வளவாக படிக்காத நிலையில் சிறுவயது முதல் நாடகத்தின் மீது கொண்ட ஆர்வத்தால் மேடை நாடகங்களில் பங்கு பெற்று வருகிறார். இந்நிலையில் இவருக்கு அறிய வாய்ப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆரம்பத்தில் இந்த

விளையாட்டை பற்றிய எந்த புரிதலும் இல்லாமல் இருந்த நிலையில் ஓரிரு வாரங்களிலேயே வெளியேறி விடுவார் என அனைவரும் எதிர்பார்த்து வந்த நிலையில் அவர்களுக்கு எல்லாம் தான் யார் என்பதை நிரூபிக்கும் வகையில் இறுதி வாரம் வரை வந்தார்.

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி மூலம் பிரபலமான தாமரை செல்வி தற்போது திரைப்பட நடிகையாக மாறியுள்ளார்.படப்பிடிப்பில் இருந்து இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது தாறுமாறாக வைரலாகி வருகிறது.

இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’திரைப்பட படப்பிடிப்பில்’ என்ற கேப்ஷனுடன் கூடிய இரண்டு புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.அதில் சிங்கம் புலி மற்றும்

ரோபோ சங்கர் ஆகிய இருவருடன் இருக்கும் புகைப்படங்களை அவர் பதிவு செய்துள்ள நிலையில் இந்த இருவரில் ஒருவருக்கு அவர் ஜோடியாக நடிக்கிறாரா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.ஒரு தெரு கூத்து கலைஞகராக

அறியப்பட்டு,ரசிகர்களின் பேராதரவோடு தற்போது வெள்ளித்திரை வாய்ப்பபை கைப்பற்றி திரைப்பட நடிகையாக மாறியுள்ள இவருக்கு வாழ்த்துக்கள் குவித்து வருகிறது.விரைவில் இவர் நடிக்கும் படம் குறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More