பொன்னியின் செல்வன் திரிஷாவிற்கு டஃப் கொடுக்கும் அதிதி ஷங்கர்..!! எப்படி இருக்கிறார் பாருங்க…?

பாலிவுட்டை போலவே தமிழ் சினிமாவிலும் வாரிசு நடிகர்கள் அதிகமாகி கொண்டே போகின்றனர்.விஜய்,விக்ரம்,விஜய் சேதுபதி என்று பலர் தங்கள் வாரிசுகளை சினிமாவில் அறிமுகம் பலர் இருக்கும் நிலையில் தமிழ் சினிமாவின் புதிய வாரிசு நடிகையாக வந்து இருப்பவர் தான் அதிதி.தமிழ் சினிமா உலகில் உலகில் பிரம்மாண்டத்திற்கு பெயர் போனவர் இயக்குனர் சங்கர்.இவருடைய இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும்,அதிக வசூலையும் பெற்றுத் தந்திருக்கின்றது.அதுமட்டுமில்லாமல் இவருடைய படங்கள் எல்லாமே பிரம்மிக்க வைக்கும் அளவிற்கு இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

இந்த சூழ்நிலையில் இயக்குனர் சங்கரின் இரண்டாவது மகள் அதிதி சங்கர் தமிழ் சினிமா உலகில் அதிதி களம் இறங்கி இருக்கிறார்.தமிழ் சினிமா உலகில் முன்னணி ஹீரோவாக திகழ்ந்து கொண்டு இருக்கும் கார்த்தி படத்தில் தான் சங்கர் மகள் அதிதி நடித்து இருக்கிறார்.

இயக்குனர் ஷங்கரின் இளையமகள் அதிதி ஷங்கர்.இவர் அண்மையில் வெளிவந்த கார்த்தியின் விருமன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார்.முதல் படமே இவருக்கு பட்டித்தொட்டி எங்கும் நல்ல வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

இதை தொடர்ந்து அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து மாவீரன் படத்தில் நடித்து வருகிறார்.மடோன் அஸ்வின் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து போட்டோஷூட் நடத்தி வரும் நடிகை அதிதி ஷங்கர் தற்போது இளவரசி போல் உடை அணிந்து போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் பொன்னியின் செல்வன் குந்தவை திரிஷாவிற்கு,அதிதி ஷங்கர் டஃப் கொடுப்பார் போலேயே என்று கூறி வருகிறார்கள்.இதோ அந்த புகைப்படம்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More