1000 கோடிக்கு மேல் வசூல் செய்த கே.ஜி.எப் யாஷின் மகன், மகளை பார்த்துள்ளீர்களா..? இதோ பாருங்க

தென்னிந்திய சினிமாவில் நடிகர் ஆவது என்பதே சிரமமான ஒன்றாக இருக்கும் நிலையில் அதுவும் அக்ஷன் மற்றும் மாஸ் ஹீரோவாவது என்பது மிகவும் இயலாத ஒன்று.பல படங்களில் கதாநாயகனாக நடித்தும் இன்றளவும் அந்த பெயருக்கு ஏங்கி வரும் பிரபல நடிகர்கள் பலர் இப்படி இருக்கையில் நடித்த முதல் படத்திலேயே உலக அளவில் மாஸ் ஹீரோவாக உருவெடுத்தவர் தான் பிரபல கன்னட நடிகர் யாஷ். கன்னட சினிமாவில் சின்னத்திரைகளில் கதாநாயகனாக நடித்து வந்த இவரது இயற்பெயர் நவீன்குமார் கவுடா. ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த யாஷ் தனது கல்லூரி படிப்பை முடித்து நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் பிரபல நாடக கலைஞர் பி.வி.காரந்த் உருவாக்கிய பெனகா நாடக குழுவில் சேர்ந்து சிறு கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கினார்.

இதன் பின் இவரது தோற்றம் மற்றும் நடிப்பின் காரணமாக அந்த நாடகங்களில் கதாநாயகனாக அறிமுகமானார்.இதன் மூலம் மக்களிடையே நன்மதிப்பை பெற்ற யாஷ் சின்னத்திரை தொடர்களில் நடிக்கும் வாய்ப்பினை பெற்றார்.

இந்திய வரலாற்றிலேயே மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படங்களில் ஒன்றாகும் கே.ஜி.எப்.இதனுடைய முதல் பாகம் திரையரங்கில் சரியாக ஓடவில்லை என்றாலும்,ஓடிடியில் பட்டையை கிளப்பியது.

இதன்முலம் இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கு ஹிமாலய அளவிற்கு எதிர்பார்ப்பு எழுந்தது.இதனால்,உலகம் முழுவதும் கிட்டத்தட்ட ரூ. 1000 கோடிக்கும் மேல் கே.ஜி.எப் 2 வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது.

இப்படத்தில் கதாநாயகனாக கன்னட நடிகர் யாஷ் நடித்திருந்தார்.இவர் இதற்கு முன் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும்,கே.ஜி.எப் திரைப்படம் தான் இவருக்கு அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

இந்நிலையில்,நடிகர் யாஷ் தனது மனைவி,மகன்,மகளுடன் எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.இதோ அந்த புகைப்படங்கள்

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More