நாட்டாமை படத்தில் நடித்த டீச்சரின் தற்போதைய நிலை தெரியுமா.? இந்த வயதிலும் எப்படி இருக்காங்க பார்த்தீர்களா…?

திரையுலகில் இன்றைக்கு எந்தனையோ புதுவித கதையம்சங்களை கொண்ட பல படங்கள் வெளிவந்த போதிலும் அந்த காலத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற பல படங்களுக்கு இன்றளவும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது. மேலும் அதையும் தாண்டி அந்த காலத்தில் படங்கள் பெரும்பாலும் ஒரு சில காட்சிகள் மக்கள் ஆழ பதியும் வகையில் பிரபலமடைந்து இருக்கும் அதேபோல் அந்த காட்சிகளில் வரும் நடிகர் நடிகைகளையும் யாரும் அவ்வளவாக மறந்திருக்க மாட்டார்கள்.அந்த வகையில் 90-களின் காலகட்டத்தில் பிரபல இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் இரட்டை வேடத்தில் நடித்து மக்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் பெரிதளவில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் நாட்டாமை.

90 க்களில் மிகவும் பிரபலமானவர்களில் ஒருவர் ராணி,இவர் 1992 ஆம் ஆண்டு நடிகர் ராமராஜ் நடித்து வெளியான வில்லுபாட்டுகாரன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ராணி.

இவர் முதன்முதலில் தெலுங்கு சினிமாவில் தயாரிப்பாளராக தான் அறிமுகமானார்.அதன் பின்பு கங்கை அமரன் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தினார் அதனைத் தொடர்ந்து தமிழ் தெலுங்கு மலையாளம் என பல மொழிகளில் நடித்து வந்தார்.

பின்பு கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியாகிய நாட்டாமை திரைப்படத்தில் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்து இளசுகளின் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தார்.முதலில் இந்த கதாபாத்திரத்தில்

நடிப்பதற்கு மறுப்பு தெரிவித்த ராணி பின்னர் படக்குழுவினர் வற்புறுத்தலால் நடிப்பதற்கு ஓகே கூறினார்,இந்த கதாபாத்திரத்தின் மூலம் தான் மக்களின் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தார்.இதை பலமுறை அவரே பேட்டியில் கூறியுள்ளார்,

பின்பு 1999 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது ராணிக்கு அவரின் கணவரும் தெலுங்கு சினிமா உலகில் தயாரிப்பாளர்.இவர்களுக்கு காதல் திருமணம்,தற்போது இந்த தம்பதிகளுக்கு ஒரு மகளும் இருக்கிறார் அவர் கல்லூரியில் படித்து வருகிறார்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More