நடிகையாக அறிமுகமானாகும் ரோஜாவின் மகள்..!! அதுவும் யாருக்கு ஜோடியாக நடிக்கிறார் தெரியுமா…?

சினிமா திரையுலகில் தற்போது பல முன்னணி நடிகர்களின் வாரிசுகள் படங்களில் நடிகர்களாக நடித்து வருகிறார்கள். இதில் ஒரு சில நடிகர்களே திரையுலகில் தொடர்ந்து நடித்து வருகிறார்கள் இன்னும் பல நடிகர்கள் வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் என்னதான் பிரபல முன்னணி நடிகரின் மகனாக இருந்தாலும் இவர்களின் நடிப்பு திறமையை பொறுத்தே இவர்கள் மக்கள் மத்தியில் பிரபலமவதோடு தொடர்ந்து படங்களில் நடிக்கிறார்கள்.இந்நிலையில் இவர்களை தொடர்ந்து பல முன்னணி நடிகைகளின் வாரிசுகளும் திரைத்துறைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.இந்த வகையில் 90 களின் காலகட்டத்தில் பல ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர் பிரபல முன்னணி நடிகை ரோஜா.தெலுங்கு சினிமாவின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான இவர் தமிழ்,

தெலுங்கு,மலையாளம் என பல மொழிகளில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.அந்த காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்த திருமணம் செய்து கொண்டு கொண்டு பிறகு செட்டில் ஆகி விட்டார்.

மேலும் இவர் நடித்து கொண்டிருக்கும் போதே அரசியலின் மீது ஆர்வம் கொண்டு தற்போது நடிப்பை தவிர்த்து ஆந்திராவில் முழுநேர அரசியல்வாதியாக உள்ளார்.இந்நிலையில் இவருக்கு அன்ஷு மாலிகா எனும் மகள் ஒருவரும் உள்ளார்.

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ரோஜா.இவர் தற்போது எந்த ஒரு படத்திலும் நடிப்பதில்லை.ஆனால்,கூடிய விரைவில் இவருடைய மகள் அன்ஷுமாலிகா நடிகையாக அறிமுகமாக இருக்கிறார் என தகவல் வெளிவந்தது.

அந்த தகவல் தற்போது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.ஆம்,தெலுங்கு திரைப்படம் ஒன்றில் கதாநாயகியாக ரோஜாவின் மகள் அன்ஷுமாலிகா நடிக்கவுள்ளாராம்.பிரபல முன்னணி நடிகர் விக்ரமின் மகனும்

இளம் நடிகருமான துருவ் விக்ரம் இப்படத்தின் கதாநாயகனாக நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.விரைவில் இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More