நிச்சயதார்த்த விழாவில் நடிகையுடன் ஜோடியாக கௌதம் கார்த்திக்..! தீ யா்ய பரவும் புகைப்படம்

315

எப்பொழுதும் சிரித்த முகத்துடன் பெண்களுக்கு மிகவும் பிடித்த கதாநாயகனாக தமிழ் சினிமாவில் வளர்ந்து வருகிறார் நடிகர் கௌதம் கார்த்திக்.பெண்களுக்கு பிடித்தமான நாயகர்களில் இவரும் ஒருவர்.இயக்குனர் மணிரத்தினம் இயக்கிய கடல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகப்படுத்தப்பட்ட இவர் பிரபல நடிகர் நவரச நாயகன் கார்த்திக்கின் மகன் ஆவார்.நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் நடிகை மஞ்சிமா மோகன் ஆகிய இருவரும் காதலிப்பதாக வ தந்திகள் பரவி வரும் நிலையில் திருமண நிச்சயதார்த்த விழாவில் இருவரும் கலந்து கொண்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

‘தேவராட்டம்’ என்ற திரைப்படத்தில் கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் இணைந்து நடித்த நிலையில் இருவருக்கும் காதல் என்றும் விரைவில் இருவருக்கும் திருமணம் என்றும் சமூக வலைதளங்களில் வ தந்திகள் பரவியது.

இந்த வதந்தி குறித்து விளக்கமளித்த மஞ்சிமா மோகன் ’இது முழுக்க முழுக்க வதந்தி என்றும் தன்னுடைய பெற்றோர் இந்த வ தந்தியால் மிகவும் மனமு டைந்து உள்ளனர் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் ஆகிய இருவரும் நிச்சயதார்த்த விழா ஒன்றில் சமீபத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

கௌதம் கார்த்திக்கின் நெருங்கிய நண்பரான கோபி என்பவரின் நிச்சயதார்த்த விழாவில் தான் இருவரும் இணைந்து கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கௌதம் கார்த்திக் தற்போது சிம்புவுடன் ’பத்து தல’ என்ற திரைப்படத்திலும் ’ஆகஸ்ட் 16,1947’ என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார் என்பதும் இந்த இரண்டு படங்களும் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.