நடிகை சோனியா அகர்வாலுக்கு 2வது திருமணமா…? கையில் மெஹந்தியுடன் வைரலாகும் புகைப்படம்

34

தமிழ் சினிமாவில் 90களில் இருந்த ரசிகர்கள் மனதில் இன்று வரை நீங்காமல் இடம் புடித்த நடிகையாக வலம் வருபவர் நடிகை சோனியா அகர்வால்.இவர் தமிழ் சினிமாவில் சில படங்களே நடித்து இருந்தாலும் தனகென்று ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார்.இவர் கோலிவுட் சினிமா துறையில் அறிமுகமான முதல் படமான 2003 ஆம் ஆண்டு தற்போது முன்னணி பிரபல நடிகராக வலம் வரும் தனுஷ் அவர்களின் ஆரம்பா கட்டத்தில் நடித்து வெளியாகி மெகாஹிட் ஆனா திரைப்படம் அந்த படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.தமிழ் சினிமாவில்,காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை போன்ற பல படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை சோனியா அகர்வால்.இவர்,இயக்குனரும் நடிகருமான செல்வராகவனை

காதலித்து அவரை திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.அதன்பின்னர் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக செல்வராகவனும்,சோனியா அகர்வாலும் பிரிந்து தனித்தனியே வாழ்ந்து வந்தனர்.

தொடர்ந்து,செல்வராகவன் கீதாஞ்சலி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வருகிறார்.நீண்ட வருடத்திற்கு பின் தற்போது இவர் மீண்டும் வெள்ளித்திரை பக்கம் திரும்பியுள்ளார்.

இந்நிலையில்,இவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருக்கும் ஒரு புகைப்படம் இவர் இரண்டாம் திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என்கிற சந்தேகத்தை ரசிகர்களிடம் எழுப்பியுள்ளது.

அந்த புகைப்படத்தில்,பக்கத்தில் கையில் மெஹந்தி போட்டுகொண்டு எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார்.இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் சோனியாவிடம் நீங்கள்

திருமணம் செய்துகொள்ள போகிறீர்களா.? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.அதற்கு பதில் கொடுத்த அவர்,’என்னுடைய திருமணத்திற்கு நான் இவ்வளவு சிறிய அளவில் மெஹந்தி வைத்துக்கொள்ளமாட்டேன்’ என்று கூறியுள்ளார்.