இயக்குனர் வெங்கட் பிரபுவின் மனைவியை பார்த்துள்ளீர்களா..? இதோ அழகிய ஜோடியின் புகைப்படம்

134

தமிழ் சினிமாவில் தற்போது தான் பல அறிமுக இயக்குனர்களும் அறிமுகமாகிறார்கள். ஆனால் அப்பொழுதெல்லாம் ஒருவர் தமிழ் சினிமாவில் இயக்குனராக வேண்டுமென்றால் அப்பொழுது உச்சத்தில் இருக்கும் இயக்குனரிடமோ அல்லது பிரபல இயக்குனரிடமோ குறைந்தது ஐந்து படங்களிலாவது உதவி இயக்குனராக பணியாற்றி இருக்க வேண்டும்.ஆனால் தற்போது இந்த குறும்படங்களில் வரவினாலும் நல்ல திறமையான இளைஞர்களின் வருகையினாலும் தற்போது பல இளைஞர்களும் தமிழ் சினிமாவில் அறஈமுக இயக்குனர்களாக கலக்கி வருகிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.இப்படி இசையமைப்பாளரும் இயக்குனருமான கங்கை அமரனின் மகனாக இருந்தாலும் ஆரம்ப காலகட்டங்களில் ஒரு சில படங்களில் நடிகராக நடித்து பின்னர் துணை நடிகராக நடித்தவர் நம் வெங்கட் பிரபு

சென்னை 28 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் வெங்கட் பிரபு.இதன்பின் சரோஜா,கோவா ஆகிய படங்களை இயக்கினார்.

முதல் முறையாக மாபெரும் நட்சத்திரமான அஜித்தை வைத்து மங்காத்தா எனும் ப்ளாக் பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்தார்.இன்று வரை அதனுடைய தாக்கம் ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது.

மேலும்,கடந்த ஆண்டு வெளிவந்த மாநாடு திரைப்படமும் வெங்கட் பிரபுவின் திரை வாழ்க்கையில் முக்கியமான ஒன்றாக அமைந்துள்ளது. இயக்குனராக மட்டுமல்லாமல் தான் ஒரு நல்ல நடிகர் என்றும் நிரூபித்து வருகிறார்.

இயக்குனர் வெங்கட் பிரபு கடந்த 2001 ஆம் ஆண்டு ராஜலக்ஷ்மி என்பவரை திருமணம் செய்துகொண்டார்.இவருக்கு ஷிவானி எனும் ஒரு மகளும் இருக்கிறார்.

இந்நிலையில்,வெங்கட் பிரபு தனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.இதோ அந்த புகைப்படம்..