நடிகர் ராஜ்கிரணின் மகளா இது..? நாதஸ்வரம் சீரியல் நடிகருடன் திடீர் திருமணம் : காதலை ஏற்று கொள்ளாத குடும்பம்

119

பிரபல நடிகர் ராஜ்கிரணின் மகள் ஜீனத் ‘நாதஸ்வரம்’ சீரியல் மூலம் பிரபலமான நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். தற்போது இவர்களது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.சன் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று ‘நாதஸ்வரம்’.இந்த சீரியலில் சம்மந்தம் என்கிற காமெடி ரோலில் நடித்து மிகவும் பிரபலமானவர் முனீஸ் ராஜா.பிரபல சீரியல் நடிகர் சண்முக ராஜாவின் உடன் பிறந்த சகோதரரான இவர்

எந்த ஒரு இடத்திலும் தன்னுடைய சகோதரர் பெயரை பயன்படுத்தாமல் தன்னுடைய நடிப்பு திறமையால் அடுத்தடுத்த வாய்ப்புகளை பெற்று,ரசிகர்கள் மனதையும் கவர்ந்தார்.

இந்நிலையில் இவருக்கு பிரபல நடிகர் ராஜ்கிரண் மகள் ஜீனத்துடன் சமூக வலைத்தளம் மூலம் அறிமுகமாகியுள்ளார்.ஆரம்பத்தில் நட்பாக பழகி வந்த இவர்கள் பின்னர் காதலிக்க துவங்கியுள்ளனர்.

பின்னர் தங்களது காதலை,இருவரும் வீட்டில் கூறி சம்மதம் பெற முயற்சித்த நிலையில் ஒரு சில காரணங்களால் இவர்கள் காதலை இருவீட்டாரும் ஏற்றுக்கொள்ளவில்லை.

பின்னர் பிள்ளைகளின் ஆசைக்காக இவர்களது காதலை ஏற்றுக்கொண்டுள்ளனர்.ஆனால் ராஜ்கிரண் மனைவி மட்டும் தற்போது வரை இவர்கள் திருமண விஷயத்தில் சமாதானம் ஆகவில்லை என கூறப்படுகிறது.

ஜாதி, மதம், போன்றவற்றை கடந்து திருமண வாழ்க்கையில் இணைந்துள்ள முனிஷ் ராஜா – ஜீனத் தம்பதிக்கு தொடர்ந்து பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.