பிரபல பாடகி அனுராதா ஸ்ரீராமின் கணவர் யார் தெரியுமா..? அழகிய ஜோடியின் புகைப்படம் இதோ

0

தற்போதைய காலகட்டத்தில் வெள்ளித்திரையில் சினிமாவில் நடிக்கும் நடிகர் நடிகைகள் எந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார்களோ அதே அளவிற்கு அந்த படங்களில் வரும் பாடல்களும் அந்த பாடலை பாடும் பின்னணி பாடகர்களும் மக்கள் மத்தியில் பலத்த பிரபலத்தை பெற்று வருகின்றனர்.இந்நிலையில் சமீபகாலமாக பல பின்னணி பாடகர்கள் மக்கள் மனதில் தங்களுக்கென நீங்காத ஒரு இடத்தை பிடித்ததோடு பல ரசிகர்களை தங்கள் பக்கம் சேர்த்து வருகிறார்கள்.இந்த வகையில் 90-களின் காலகட்டத்தில் தொடங்கி இன்றைக்கு வரைக்கும் பல படங்களில் தனது இனிமையான குரலால் பலரது மனதை கொள்ளை கொண்டவர் பிரபல முன்னணி பாடகி அனுராதா ஸ்ரீராம்.

பாடகி அனுராதா தனது 6 வயதிலேயே அவரது இசைப் பயிற்சியை தொடங்கியவர்.பின் கச்சேரிகள்,இசை நிகழ்ச்சிகள் என்று அனைத்திலும் அனுராதா பங்கு பெற்றிருந்தார்.

ஏ.ஆர்.ரகுமானின் பம்பாய் திரைப்படத்தில் இடம்பெற்ற மலரோடு மலரிங்கு என்ற பாடலை குரூப் பாடகராக பாடி சினிமாவிற்கு அறிமுகமானார் அனுராதா.

அதன்பின்னர் மின்சார கனவு படத்தில் இடம்பெற்ற அன்பென்ற மழையிலே என்ற பாடல் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார்.தமிழை தாண்டி தெலுங்கு,கன்னடம்,

மலையாளம்,ஹிந்தி என பல மொழிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இருக்கிறார்.தற்போது அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அதிகம் பங்குபெற்று வருகிறார்.

இவரது கணவர் பெயர் ஸ்ரீராம் பரசுராம்,இவர் ஹிந்துஸ்தானி கிளாசிக்கல் பாடகராவார்.இதோ பாடகி அனுராதா தனது கணவருடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம்