சூர்யாவின் 42 ஆவது படத்தில் பாலிவுட் நடிகையா..? எந்த நடிகை தெரியுமா..?

2

தென்னிந்திய சினிமாவில் தற்போது பல வாரிசு நடிகர்கள் தொடர்ந்து கதாநாயகர்களாக களமிறங்கி வருகிறார்கள்.இருப்பினும் இதில் ஒரு சில நடிகர்களே தங்களது நடிப்பு திறமையால் பல ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்து முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார்கள்.இப்படி இருக்கையில் பல வாரிசு நடிகர்கள் ஒரு சில படங்களில் நடித்தபின்னர் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பும் பிரபலமும் கிடைக்காத நிலையில் இருந்த இடமே தெரியாமல் போயுள்ளனர்.இந்நிலையில் பிரபல முன்னணி நடிகர் சிவகுமாரின் மூத்த மகனான சூர்யா வாரிசு நடிகராக திரையுலகில் நுழைந்து தற்போது தனது நடிப்பு திறமையால்

பல லட்சம் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்ததோடு தனக்கென தனி அடையாளத்தையும் ரசிகர் கூட்டத்தையும் வைத்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் சூர்யா,

அவர் அடுத்தடுத்து சில முக்கிய திரைப்படங்களில் கமிட் செய்து வைத்துள்ளார்.மேலும் பாலா இயக்கத்தில் வணங்கான் திரைப்படத்தில் நடித்து வந்த சூர்யா,திடீரென படத்தை நிறுத்திவிட்டு சிவா இயக்கும் படத்தில் நடிக்க சென்றுவிட்டார்.

அதன்படி பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சூர்யா 42 திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது.பிரம்மாண்டமாக உருவாகவுள்ள இப்படத்தை இரண்டு பாகமாக வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த இப்படத்தின் பூஜையிலும் அப்படத்தில் கதாநாயகி கலந்து கொள்ளவில்லை,இதில் நடிக்கும் கதாநாயகி குறித்தும் இன்னும் அறிவிக்கப்படாமல் இருந்து வருகிறது.மேலும் இன்று சூர்யா 42 பட பூஜையின் முழு வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

அந்த வீடியோவின் Description ல் நடிகை திஷா பாட்னி நடிப்பதை குறிப்பிட்டுள்ளனர்.அவருடன் யோகி பாபு,கிங்ஸ்லி,கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்டோர் நடிப்பதையும் குறிப்பிட்டுள்ளனர்.