நடிகர் பாண்டியராஜனின் மகன்களா இது….? பேரக் குழந்தைகளுடன் இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா..?

5

தமிழ் சினிமாவில் 80களில் நடித்த பிரபல நடிகர் மற்றும் இயக்குனராகவும் தனது பயணத்தை தொடர்ந்தார்.இவர் தனது முதல் படமான அந்த எழு நாட்கள் என்னும் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து இவர் தமிழ் மக்களிடேயே பிரபலமானவர்.இவர் 1985யில் வெளியான கன்னி ராசி என்னும் படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார்.இவர் 1985யில் வெளியான ஆண் பாவம் மூலம் நடிகர் பண்டியரஜனாக அறிமுகமாகி பின்பு இவர் பல தமிழ் சினிமா படங்களில் நடித்துள்ளார்.இவருக்கு ஆண் பாவம் படத்தின் மூலம் நடிகராக மட்டுமல்லாமல் ஒரு இயக்குனராகவும் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் கிடைத்தது.அதே போல் இவர் பல முன்னணி நடிகர்களை வைத்து படங்கள் இயக்கி அந்த படங்கள் அனைத்தும் இவருக்கு வெற்றி படங்களாகவே அமைந்தது.

நடிகர் பாண்டியராஜன் தனது பேரக் குழந்தைகளுடன் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.தமிழ் சினிமாவில் இயக்குனராகவும்,நடிகராகவும் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் பாண்டியராஜன்.

இவர் கன்னி ராசி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார்.அதனைத் தொடர்ந்து அவர் ஆண் பாவம்,மனைவி ரெடி, நெத்தியடி,கபடி கபடி பல படங்களை இயக்கியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து ஹீரோவாக அவதாரம் எடுத்து பாண்டியராஜன் பல படங்களிலும் நடித்துள்ளார்.அவர் தனது முட்டை கண்ணை உருட்டி உருட்டி பார்த்து மக்களிடையே பெருமளவில் பிரபலமானார்.

நடிகர் பாண்டியராஜன் 1986ம் ஆண்டு வாசுகி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.அவர்களுக்கு ப்ருத்வி,பல்லவா,பிரேம் என 3 மகன்கள் உள்ளனர்.பாண்டியராஜன் மகன் பிருத்வி சில படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது பாண்டியராஜன் தனது மனைவி,மகன்கள் மற்றும் பேரக் குழந்தைகளுடன் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.