20 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் நடிக்கும் நடிகை யாரு தெரியுமா..? கொண்டாடும் ரசிகர்கள்

1

பொதுவாக சினிமாவில் ஹீரோவாக நடிப்பது என்று அந்த காலத்திலிருந்து இந்த காலம் வரை அவ்வளவு எளிதான காரியம் இல்லை எனலாம் பிரபலமாகவோ அல்லது நடிகரின் வாரிசாகவோ இருந்தால் மட்டுமே எளிதில் சினிமாவில் நுழைய முடியும்.அப்படியே நுழைந்து ஒரு சில படங்கள் நடித்தாலும் அதன் பிறகு அவர்களின் திறமையின் காரணமாகவே மேற்கொண்டு சினிமாவில் மற்றும் மக்கள் மனதில் நிலைக்க முடியும்.இவ்வாறான நிலையில் அந்த காலத்திலேயே சாதாரணமான குடும்பத்தில் இருந்து கருமையான நிறம் சாதாரணமான உ டலமைப்பு என இருந்த போதிலும் தனது நடிப்பு திறமை மற்றும் ஸ்டைலால் ஹீரோவாக ஆனதோடு அன்றிலிருந்து

இன்று வரை முன்னணி நடிகர்களில் முதன்மையானவராக இருப்பதோடு தென்னிந்திய சினிமாவில் தொடர்ந்து பல வருடங்களாக சூப்பர் ஸ்டார் எனும் பட்டத்தை தக்க வைத்து கொண்டு இருப்பவர் பிரபல முன்னணி நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த அவர்கள்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் ஜெயிலர்.சமீபத்தில் இப்படத்தின்

பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கியுள்ளதாக அறிவித்து இருந்தனர்.இந்நிலையில் தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில்

நடிக்கவுள்ள நடிகர்கள் குறித்து அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.அதன்படி ரம்யா கிருஷ்ணன்,வசந்த் ரவி,யோகி பாபு,விநாயகன் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.ரஜினியுடன் நீலாம்பரி

கதாபாத்திரத்தில் ரம்யாகிருஷ்ணன் நடித்து 1999-ல் வெளியான படையப்பா படம் பெரிய வரவேற்பை பெற்றது.2002 ல் வெளியான பாபா படத்திலும் சிறிய வேடத்தில் வந்தார். 20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இருவரும் இணைந்து நடிப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.